பள்ளி பருவ காதல்

பள்ளி பருவ காதல்...!

அவன் எதிர்காலம்
எதுவென்று அறியாமலே
அவனை எதிர்காலமாய் எண்ணியவள்....
பள்ளி, கல்லூரி,பணியிடம்
என்று வந்த காதல் வாய்புகளையெல்லாம்
காரணமின்றி நிராகரித்தால்
காரணம் நீயென்பதால்...
ஆணின்(உன்) பின்னே வெட்கமில்லாமல் சுற்றுவதால்...
ஏளனமாய் எண்ணினாயோ?
பாழாய் போன காதல் ஆண் பெண் பேதமறியுமோ?
நீயோ உன் உதாசின படுத்தியவளின் நினைவில் தவிக்கிறாய்...
நானோ நீ உதாசினங்ளை கடந்து உன் நினைவில் தவிக்கிறேன்!
காதலென்றால் ஏமாற்றமென்று
அறிந்தும் என்னை ஏமாற்ற விளைகிறாயே!
காலத்தின் கட்டாயத்தால்
கன்னியிவளின் காதலை
வெளிபடுத்த சந்தர்ப்பம் கிட்டாமல் தனிமையில் தவிக்கிறாள்!
தனிமையின் தாகம் தீர்க்க காதல் நீரை தருவாயோ!...
இல்லை தனிமையென்னும் வாழ்நாள் நரகத்தை
பரிசாய் தருவாயோ....!

காத்திருப்புகளுடன்..

எழுதியவர் : யாழ்விழி_94 (7-Aug-18, 8:11 pm)
பார்வை : 130

மேலே