கண்ணீர் அஞ்சலி

கன்னித்தமிழை தன்னுள்கொண்டு இன்பமளித்த தொன்வேந்தே
உன்னில்தோற்ற பொன்மொழிகள் என்னுள்கரைய தன்மறந்தேன்...

ஆராயும் மனம்
கூரான நயம்
பாராளும் திடம்
போராடும் இனம்...

முப்பாலுக்கு அடிபிறழாது முத்தமிழுக்கு முடிசூட்டி
முக்காலமும் வடிந்திடாது எத்தனையோ படியளந்தாய்...

புன்னகையால் வில்லேந்தி அதைச் சொற்களால் மெருகேற்றி
தென்னகத்தில் வல்லுநராய் வலம்வந்த தமிழ்த்தேனே...

வரலாற்றை வடித்துரைத்து புரவலராய் கொடியசைத்து
கரவிளிம்பில் காவியம்படைத்து கரைதொட்ட வரலாறே...!

எழுதாத ஏடுகள் எழுவதற்காய் எத்தனிப்பதை கண்டீரோ...?
பழுதாகா எழுத்தாணி அழுதபடி உறைந்திருப்பதைக் காணீரோ...!

#தமிழ்_சான்றோன்_கலைஞர்_கருணாநிதி

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Aug-18, 7:44 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே