கலைஞர்க்கு ஓர் கவி

மூத்த எழுத்தாளன் மூச்சிழந்து போனான்
முத்தமிழ் கொஞ்சம் பேச்சிழந்து போனதுவே

பக்கத்து நாட்டில் பத்தி எறிந்த சதித் தீயை
அனைத்திட நீ வீதியில் பட்டினி கிடந்தாய்
நாம் துடிப்பதை அறிந்து பதைக்கின்றாய் என்றிருந்தோம்
அரசியல் இலாபத்திற்காய்
நடிக்கின்றாய் என்பதை நிரூபித்தும் விட்டாய்
இன்று துடிப்பிழந்துகிடக்கின்றாய்
அன்று நீ இறந்திருந்தால்!
அழுது கண்ணீர் வெள்ளம் பரவியிருக்கும்
ஈழத்தில் உன் சிலை எழுந்திருக்கும்


திரைக்கதை எழுதி திரும்பி பார்க்க வைத்தீர்கள்
திராவிட கழகத்தையும் உருவாக்கினீர்கள்
தமிழ் மீது காதல் கொண்டு தேன்கவி தந்தீர்கள்
எம் தமிழரை காவுகொள்ளவும் வைத்தீர்கள்
பன்முக ஆற்றலால் கலைஞர் ஆனீர்கள்
ஈழத்தின் எழுந்த யுத்த சத்தம் கேட்டு
உன் எழுதுகோல் உரக்க சத்தமிடவில்லையா
காலத்திலும் உன் படைப்புக்கள் அழியாது
என்றும் ஈழ மண் உங்கள் ஏமாற்றத்தை மறவாது

ஓர் சின்ன வருத்தம் நீங்கள் அன்று இறந்திருக்கலாம்
காந்தி சிலை அருகிலாவது கலைஞர் சிலை நிறுவியிருக்கும்
தமிழ் மக்கள் மனம் விட்டு விசும்பி அழுதிருப்பார்கள்
உங்களுக்கு அரசியல் இலாபத்திற்காய்
வீதியில் குளிரூட்டி போட்டு தூங்கினாய்
இந்த மரணப் படுக்கையும் அரசியலாய் இருக்குமோ என்னவோ ?

ஓர் சின்ன ஏக்கம் அன்று நீங்கள் இறந்திருக்கலாம்
போற்றி பாடியிருப்போம்
புரண்டு அழுதிருப்போம்
எட்டு நாள் கருப்புகொடி சொருவியிருப்போம்
பதாதைகள் தொங்கவிட்டிருப்போம்
ஈழம் துண்டாடப்பட்டதற்கும் நீங்கள் தான் காரணம்
தமிழ் இனம் திண்டாடுவற்கும் நீங்கள் தான் காரணம்
வந்தேறிகள் வாய்கிழிய பேசுவதற்கும் நீங்கள்தான் காரணம்
நன்றாக வாழ்ந்து முடித்து விட்டீர்கள்
நாங்கள் வாழ வழி செய்யாமல் போய்விட்டீர்கள்
மகிழ்வோடு அனுப்புகின்றோம் போய்வாருங்கள்
அங்கு ஈழம் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீங்கள்
அதையும் குறித்து வைத்தீருப்பீர்கள்
உங்களை துரோகி என்று அழைக்க நான் விரும்பவில்லை அய்யா
எங்களுக்குள்ளே இருந்து செய்த துரோகிகளை விட
நீங்கள் ஒன்றும் துரோகம் இழைக்க வில்லை
சுயநலமாய் இருந்து விட்டீர்கள் ஏனெனில்
நீங்கள் தமிழன் இல்லையே
நன்றாக உறங்குங்கள் காலம் கடந்து வாழ்ந்து விட்டீர்கள்
நன்தமிழ் வாழட்டும் போய்வாருங்கள் அய்யா

என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் .

எழுதியவர் : மட்டுநகர் கமல்தஸ் (8-Aug-18, 10:47 am)
பார்வை : 1954

மேலே