தொடரும் -

தீரா கண்ணீர்
திண்ணும் தனிமை
வேண்டாக் காதல்
எல்லாம், எல்லாம்,
விரட்டியது என்னை....

மாறா நினைவு
மயக்கிய கனவு
இடிந்த இதயம்
கடிந்த நாட்கள்
எல்லாம் அன்பே -நான்
கடந்த பாதையில்
கனிந்த குறும்படம்....

எழுதா காகிதம்
எந்தன் வாழ்க்கை -நான்
எழுதிய கவிதையோ
ஏங்கிய வாழ்க்கை
ஆயினும் அன்பே!
இன்பம், துன்பம்
இரண்டிலு முண்டு...

கேளா கடவுள்
மீளா துயரம்
ஓடும் கண்ணீர்
ஒடுங்கிய நெஞ்சம்
எல்லாம் எல்லாம்
எனக்கும் உண்டு..

எனினும் அன்பே!
எழுந்து நின்றேன்
எந்தன் வாழ்வும்
தொடரும் என்றே...

-- கல்லறை

எழுதியவர் : கல்லறை செல்வன் (9-Aug-18, 12:36 am)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 409

மேலே