நீ, நிலா -

வா நிலா
நீ, வாழ்வது என்ன வானிலா

ஆ நிலா
நீ, அன்பு பாலை சுரக்கும் ஆ நிலா

ஈ நிலா
நீ, இறக்கம் கொண்டு ஈயும் நிலா

தா நிலா
நீ, நின் அன்பை அள்ளி தரும் நிலா

நா நிலா
நீ, செந்தமிழ் ஊற்றில் நா நிலா

பா நிலா
நீ, என் இதயம் பாடும் பா நிலா

மா நிலா
நீ, மனிதர் குலத்தில் மா நிலா


தீ நிலா
நீ, ஒளிரும் அன்புத் தீ நிலா

பூ நிலா
நீ, தமிழ் மதுரம் ஏந்திய பூ நிலா

மே நிலா
நீ, என்நெஞ்சில் என்றும் மே நிலா

நோ நிலா
நீ, பிறர் வாடக்கண்டு நோவும் நிலா

போ நிலா 
நீ, போகும் பாதைபூக்கும், போ நிலா

--கரையும் கல்லறை

எழுதியவர் : கல்லறை செல்வன் (9-Aug-18, 5:29 pm)
பார்வை : 996

மேலே