வள்ளுவருடன் கைகோர்த்து
கற்கக் கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகஎன்ற றிந்துநில்
பிற்காலத் தில்நீ உயர் !
--குறட்பா ஒருவிகற்ப சிந்தியல் வெண்பாவாக
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்காத லால்நீயும்
எண்ணித் துணிபின் இயங்கு !
--- குறட்பா ஒருவிகற்ப சிந்தியல் வெண்பாவாக
வழுத்தினள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினேன் என்றுசொல்யா ரந்தப்
பழிகாரி சொல்என் றனள் !
----குறட்பா பலவிகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பாவாக
இவைகளை அளவடிகளிலும் சொல்லமுடியும் .