மழை

பசித்த நமக்கு
புசிக்க விளைவித்தவன்
புசிக்க வழியில்லை..

நாடாளும் கூட்டம்
ஒருவேளை சோற்றிற்கு
போராடும் நிலை...

பசி பட்டினி நிலைபோக்க
களமாடிய கூட்டம்...
இன்று பசியின் பிடியில்..!

பாமரன் அவன்
பட்டினி நிலைகண்டு
கனத்த இதயமொன்று
இலேசாகிறது..

மழை..!
- மகா

எழுதியவர் : மகா (18-Aug-11, 12:44 pm)
சேர்த்தது : maharajan
Tanglish : mazhai
பார்வை : 374

மேலே