ஏன் இந்த மௌனம்
காரணமென்ன இப்பேரிடைவேளிக்கு
இடைமறந்து நடைகுழம்பி நிற்கிறேன்
என்பதாலா?
இல்லை என் உரைநடை தடுக்கிய
மனத்தின் நிலைதடை விதித்த கலை
என்பதாலா?
உணர்ந்திட்ட உண்மைநிலை நிலைகுலை
செய்திட்ட இன்ப மலைப்பு நின்னிலை
என்பதாலா?
மௌனம் காத்திட்ட மலையருவி
உறைந்து நிற்கும் மடையடை நிலை
என்பதினாலா?
உரைத்திடு உன் சைகைகளினாலாவது
உயிர் போகும்முன்.