விண்மீன்

வானில் மிதக்கும் விண்மீன்கள்
புவியில் உலவ அவாக்கொண்டு
தரையிறங்கி நடக்கையிலே ..,
கதிரவனும் வெட்கத்தினாற் நானிக்
குறுகி மேகத்தினுள் மறைகையிலே .....
திங்களும் தன் வெளிச்சம் போதாதென
வராமலே நின்றிடவே ,
மின்னலும் ஈடு கொடுக்க முடியாமற் ஓட
கருங்கூந்தலை கார்முகில் என நினைத்து
வருணன் ஓடி வந்து ....
அவளைத் தொட்டப் பின் ...
அவளிலிருந்து விடைபெறவும் இயலாமல்
தஞ்சமடையவும் முடியாமல் ....
விடாமல் ... விட்டு அடிக்கிறது .... மழை .

எழுதியவர் : ஞானவள்ளி (10-Aug-18, 10:23 pm)
சேர்த்தது : Sevagi
Tanglish : vinmeen
பார்வை : 356

மேலே