கண்ணாடி வளையல்
![](https://eluthu.com/images/loading.gif)
தங்கம் தீண்டும்
பொழுதில்லா இன்பம்...
மண்வளை தந்ததென்ன மாயம்..
என் விரல் நீ தீண்ட
என் தவம் செய்தேனோ!
உயிரில்லா ஜடத்திற்க்கும்
உயிர் பூ பூத்திடுமே...
கோடி பணமின்றி
என் புன்னகையை விலைக்கு
வாங்கி விட்டாய்...
கொஞ்சம் நீ காதல் செய்...
ஆயுள் முழுதும்
தீர்த்திடுவேன் உன்
காதல் கடனை❤...
கண்ணாடி வளை
தீண்டும் பொழுதுகளில்...
மெய்மறந்து நின்றேன் ..
வளைவழி வஞ்சியிவளை வருடியதால்..
மீளும் சப்ததில் மீளாமல் என் மனம்...
உன் காதலை திருடிக் கொண்டே
இருப்பேன் கள்ளியாய்😍