ஜாதியும், காதலும்-மோதல்
ரத்த வெறிக்கொண்டலைந்த ஜாதியே,
காதலர் எங்களை பிரிக்க பார்த்தாயா?
பிரிக்கமுடியாது போக, நீ கரங்கட்டி
எங்களை அழித்திட முயன்றாய்.....
முயற்சியின் முடிவில் ........... நீ
வெற்றியும் பெற்றாய்............
எதில்......................? எங்கள்
உடலை அழித்தாய், ஆனால்
ஒன்று நீ இன்னும் அறியாது
வெறிகொண்டு அலைகிறாய்
ரக்த காட்டேரியாய்.........
நீ இப்படி அழிப்பது வெறும்
உடலைத்தான்.... உனக்கு தெரியாது
உடலைவிட்டு பிரியும் உயிர்
காதலில் சங்கமித்த எங்களுயிர்
என்றோ ஓருயிர் ஆனது அது
உடலைவிட்டு பிரிந்தும்
அதை ஜாதியே உன்னால்
அழிக்க முடியவில்லையே , ஏன்?
அது உண்மைக்காதல் .......
அழியாது , அழிக்கமுடியாதது,
என்றும் அமரத்துவம் பெற்றது
காதல் தோல்வி அடையவில்லை