கலைஞருக்கு நினைவஞ்சலி
கலைஞருக்கு நினைவஞ்சலி
நற்தமிழை நாம் அறிய மேடையிலே அரங்கேற்றி
அடுக்கு மொழியால் அவணியை வென்று
அன்றும் இன்றும் நெஞ்சில் வாழும் வசனங்களை
நாவினிக்க பேசி வழிகாட்டிய அறிவுச்செம்மல்
அரசியலை நேசித்து அருமையாக வழி நடத்தி
வந்த இன்னல்களை வைர நெஞ்சமுடன் தாங்கி
தமிழையும் தமிழனையும் ஒன்றாக இருத்தி காத்து
வாழ்ந்த நாளெல்லாம் கட்சியதனை வளர்த்து
அமரத்துவம் அடைத்திட்ட அருமை கலைஞரை
நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்துவோம் !!