சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா

முத்துத் தாண்டவரின் பாடல்

சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா / ஆபோகீ

பல்லவி:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா

அநுபல்லவி:
சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு

சரணம் 1:
காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை

சரணம் 2:
சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து
பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ

சரணம் 3:
சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை
அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத்தில்லைத்தாண்டவராயனை

சரணம் 4:
நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்
தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்

இப்பாடலை G N Balasubramaniam- சேவிக்க வேண்டும் அய்யா- Ragam Andholika என்று பதிவு செய்து யுட்யூபில் கேட்டு மகிழலாம்.

இப்பாடலை Sirkali Govindarajan Sevikka Vendum Ayya – Andolika என்று பதிவு செய்து யுட்யூபில் கேட்டு மகிழலாம்.

இப்பாடலை Maharajapuram Santhanam-Sevikka vendumaiyya-Andholika என்று பதிவு செய்து யுட்யூபில் கேட்டு மகிழலாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-18, 10:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 312

சிறந்த கட்டுரைகள்

மேலே