சுதந்திரம்

காந்தியின் சீரிய சிந்தனை சுதந்திரம்.
நேருவின் நேரிய அரசியல் சுதந்திரம்.
நேதாஜியின் வீரிய விடுதலை சுதந்திரம்.
சர்தாரின் கூரிய திறமை சுதந்திரம்.
பட்டி தொட்டி பாட்டன் பூட்டன் முதல்,
பகட்டு நகர படித்த மேதைவரை
அனைவர்க்கும் சுதந்திரம் ஆர்ப்பரித்த சுதந்திரம்.
உண்ண சுதந்திரம், உறங்கவும் சுதந்திரம்.
திண்ணை சுதந்திரம் தெருவோரம் சுதந்திரம்.
வழங்க சுதந்திரம், வளரவும் சுதந்திரம்.
படிக்க சுதந்திரம் நடிக்க சுதந்திரம்.
பேச சுதந்திரம், ஏசவும் சுதந்திரம்.
கருத்து சுதந்திரம் காக்கவும் சுதந்திரம்.
எழுத சுதந்திரம் எளியோர்க்கும் சுதந்திரம்.
மக்கள் சுதந்திரம் மாக்களுக்கும் சுதந்திரம்.
பெற்ற சுதந்திரம் ரத்தம் தோய்ந்த சுதந்திரம்.
சாதியற்ற சுதந்திரம் நீதிபெற்ற சுதந்திரம்.
மதமுணரா சுதந்திரம் மொழியில்லா சுதந்திரம்.
எட்டி பார்த்தவன் ஏய்க்க முயல்கிறான்.
வெட்டி சுதந்திரம் வெறிமிக்கு தந்திரம்.
வெறுப்பு சுதந்திரம் வெறும்பேச்சு சுதந்திரம்.
எட்டி தள்ளவே பாய்ந்தே ஓடி வா!
சுதந்திரம் சுதந்திரம் எங்கும் சுதந்திரம்.
மூச்சு சுதந்திரம் நம் பேச்சு சுதந்திரம்.
வெல்க சுதந்திரம் பகை வெல்க சுதந்திரம்!
வளர்க பாரதம் வெறுப்பில்லா பாரதம்!
வெல்க பாரதம் வெறியில்லா பாரதம்!

எழுதியவர் : து. கிருஷ்ணமூர்த்தி (15-Aug-18, 8:16 am)
Tanglish : suthanthiram
பார்வை : 160

மேலே