கண்ணாடியும் கைத்தடியும்

கண்ணாடியும் கைத்தடியும்
அவர் விட்டுச் சென்ற அடையாளம்
நாம் சுவாசிக்கும் காற்று
அவர் கொடுத்த சுதந்திர மூச்சின் அடையாளம்
அவர் விட்டுச் சென்ற பாதச்சுவடுகள்
அவர் நடந்து சென்ற பாதையின் அடையாளம்
அந்தப் பாதையில் எத்தனை பேர் நடக்கிறோம் என்பது
இன்று கேள்விக்குறியான அடையாளம் !
காந்திஜியை நன்றியுடன் நினைவு கூறுவோம்
நாட்டுக்கொடியை பெருமையுடன் வணங்குவோம் !