அன்னை என்ற இறைவன்
அன்னை என்ற இறைவன்
அன்னையின் அன்பிற்கு அளவுகோலும் உண்டோ
அது அந்திவான நட்சத்திரங்களை அளப்பது போலன்றோ
தன்னலமற்ற தாயின் பாசத்திற்கு ஈடுயிணைதான் உண்டோ
ஈரைந்து மாதங்கள் உள்ளே உயிர்வளர்த்து உனைத்தாங்கி
ஈன்றபின் கண்ணீர் வடிக்கும் கருணைக்கு கூலியும் உண்டோ
தாயவள் தான் பெற்ற சேய்தனை பேணிட அடையும் வேதனைக்கு முடிவும் உண்டோ
தனி நடக்கும் மகவினைக் கண்டு பூரிக்கும் உள்ளத்திற்கு உவமையும் உண்டோ
மனிதா நீ கைமாத்து செய்ய எண்ணி மதிப்பு போடாதே
இறைவன் கொடுத்த தன் பாகத்தை கணக்கு பார்க்காதே !!!