சுதந்திர தினம் என்றால்

சுதந்திர தினம் என்றால்.....

ஒரு நாள் விடுமுறை
தொலைகாட்சியில் சிறப்பு நிகழ்ச்சி
முதல்முறையாய் தொலைகாட்சியில்
ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்
கொடியேற்றிய பின்
கிடைக்கும் மிட்டாய்
சிறிது நேரம் ஆடையின் மேல்
ஒட்டி கொண்டிருக்கும் தேசிய கொடி
வாட்ஸ் அப்பிலும்
முகநூலிலும் பரிமாறிக்கொள்ளும்
போலி சுதந்திர தின வாழ்த்துக்கள்


இப்படி எல்லா வருடங்களிலும்
வந்தவுடன் சென்று கொண்டேதான்
இருக்கிறது அனைவருக்குமான
சுதந்திர தினம்
நம்மை வீட்டுக்குள் சிறை வைத்தபடியும்
அந்நியர்களின் அலுவலகத்தில்
நம்மை அடகு வைத்தபடியும்
பெரும் பாலும்
அந்நிய தயாரிப்புகளுக்கு
நம்மை அடிமைபடுத்தியபடியும்

ஆனால் இங்கு பலருக்கும் தெரிவதில்லை
சில தலைவர்கள் உட்பட
சுதந்திரத்தை எப்படி
போராடி பெற்றோம் என்பதும்
எப்படி தக்க வைப்பதென்பதும்

தியாகிகள் பேச வேண்டிய நாளில் கூட
அறை குறை ஆடைகளுடன்
நடிகைகளை பேச வைத்தும்
போலிதனமான கதாநாயகர்களை
பேட்டி எடுத்தும்
சுதந்திர தினத்தை
கொச்சை படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும்
உட்பட

அனைவருக்கும் ஆதங்கத்துடன்
இனிய என்று சொல்ல இயலாத
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (14-Aug-18, 2:56 pm)
பார்வை : 1117

மேலே