தேசமே நேசமாய்

என் தேச சரித்திரத்தை திரும்பிப் பார்க்கிறேன்...... தியாகத்தின் சாரல் புயலாய் வீசுகிறது.... திரும்பும் திசை எல்லாம் என்னவர்களின் குருதித் துளிகள் வெள்ளப் பெருக்காய்...கணவனை சகோவை தந்தையை இழந்து தவித்த எம்மங்கையரின் அடக்கப்பட்ட உணர்வில் தவழ்ந்தது என் நாடு.... தியாகச் சுடர்களின் வெளிச்சத்தை தேச விழாக்களில் மட்டுமே உணர்கிறோம்..... தியாகச்சுடரில் தான் நாட்டின் இருளே ஒழிந்தது என்பதை உணராத ஒரு சில இளைஞர்கள்... உணர்ந்து கொள்வோம்...நம் அரசியலும் எழுதப்பட்டும் கிழிந்த பக்கமாய்....வண்ணம் தீட்ட நம்மால் முடியும் என்பதை உணரு இளைஞனே..வலை தளங்களை வயதை வசியமாக்குகிறது... வாழ்க்கை உன்னை நோக்கி கை அசைக்கும் போது கையைப் பிடித்து வழி நடத்து.... நம் நாட்டை உன் வசப்படுத்து...... வாழ்க நாடு என்பதில் இல்லை நம் வளர்ச்சி....வளமான சிந்தனைகளை வளர்ப்பதில்..........