சுதந்திரம்

** அன்பு வழி அண்ணல் காந்தி ஆசி பெற்ற சுதந்திரம்!

** ஆசியாவின் ஜோதியாம் நேரு பெற்ற சுதந்திரம்!

** இமயம் முதல் குமரி வரை இணைத்துப் பெற்ற சுதந்திரம்!

** ஈடு இணை இல்லாதது இந்தியாவின் சுதந்திரம்!

** உண்மை உழைப்பு உயர்வு என அடித்துரைத்த சுதந்திரம்!

** ஊண் உறக்கம் ஏதுமின்றி உழைத்துப் பெற்ற சுதந்திரம்!

** எங்கள் நாடு எமக்கே சொந்தம் என்று சொன்ன சுதந்திரம்!

** ஏர் முனையும் போர் முனையும்
ஒன்றுபட்ட சுதந்திரம்!

** ஐயமின்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் பெற்ற சுதந்திரம்!

** ஒன்று பட்டால் உண்டு வாழ்வு உணர்த்திய நம் சுதந்திரம்!

** ஓர் வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்த சுதந்திரம்!

** ஔடதமாய் அடிமைப் பிணியைத் தீர்த்தது நம் சுதந்திரம்!

** அஃதை அடுத்தவர்க்கு ஊறு இன்றி அனுபவிப்போம் தினம் தினம்!!

எழுதியவர் : நித்யா கருப்புசாமி (15-Aug-18, 8:17 pm)
சேர்த்தது : Nithya
Tanglish : suthanthiram
பார்வை : 594

மேலே