மென்மையே பெண்மை
பெண்ணே உன்னில் அடங்கிய
மென்மைதான் எத்தனையோ
நீ அறியாயோ-உன் மேனி மென்மை,
உன் கரங்கள், அது தரும் ஸ்பரிசங்கள்,
இவை மென்மை, உன் புன்னகையும் மென்மை
மெய்யல் தரும் உந்தன்
காந்தப் பார்வை மென்மை,
உன் குரலில் ......
நீ பேசினால் மென்மை,
நீ பாடினால் குயிலின் மென்மை ,
கொலுசணிந்த கால்களுடன்
நீ நடந்துவரும் அழகில் மென்மை;
உன் உள்ளத்தில் ஏது கடுமை?
உன் உள்ளம் மென்மை,
மலரைப்படைத்த இறைவன்
அதில் அழகை வைத்தான்
அழகுடன் வாசம் தந்து
மென்மையும் கூட்டி
மலருக்கு ஏற்றம் தந்தான் ;
மலரைப் படைத்தபின்னே
பெண்ணே, அவன் உனைப் படைத்தானோ ?
அப்படித்தான்............
மனிதரில் மலராய்
அழகில் மலராய், மென்மையில் மலராய்
மலருக்கு வாசம் என்றால்
பெண்ணே உன் கூந்தலில்
என்றும் வாசம் தந்த மலர்
உன் கூந்தலுக்கு வாசம் நிறைத்ததோ
மலர் சூடாதபோது கூட
அது வாசம் தந்திட
பெண்ணே ஒன்றை நீ
அறிந்திடவேண்டும் , அதுவே
என்றும் நீதான் மென்மைக்கு சொந்தம்
அழகி,சிரிப்பில்,பார்வையில்
பேச்சில், நடையில் மென்மையே
உனக்கு மேன்மை
உன்னுள் வீரம் உண்டு
அதிலும் ஓர் மென்மை
அதில் க்ரோதம் இல்லை
பெண்மைக்கு அது மேன்மை
பெண்ணே உன் மென்மைதரும் மேன்மையால்
என்றும் நீ உயர்ந்தவள்