நீ இல்லா நிமிடங்களில்

நீ இல்லா நிமிடங்களில் . . .

பெரிதாய் ஒன்றும் மாற்றமில்லை
கீழ்காணும் சில மாற்றங்களை தவிர

கடிகாரம் என்னோடு பேச மறுக்கும்

எனக்கும் நிழலுக்கும் இடையே
யுத்தங்கள் நடக்கும்

மனிதர்களே இல்லா தீவென
என் சூழ்நிலை மாறும்

மூச்சு காற்றும் அடிக்கடி
வேலை நிறுத்தம் புரியும்

தனிமை மிருகம்
என் மனதை புசிக்கும்

சுற்றும் உலகம்
எனக்கு மட்டும் சுற்ற மறுக்கும்

இதயம் அடிக்கடி இறங்கி போய்
நீ வருகிறாயா என பார்க்கும்

மலரை சுற்றும் வண்டுகள் கூட
எனை கேளியாய் பார்த்து சிரிக்கும்

பசிக்க மறந்து வயிறு கூட
என் உடல் நிலையை கெடுக்கும்

விரலுக்கும் உதடுகளுக்கும் இடையே
அடிக்கடி சிகரெட் கடக்கும்

உறக்கம் தொலைத்த விழிகள் கூட
உன் அழைப்பு இல்லா
செல்போனை முறைக்கும்

குளிக்க மறந்து
உண்ண மறந்து
அழகை துறந்த துறவியென
உடலும் நிலை மாறும்

நீ இல்லா உலகில்
இருந்திட மறுத்து
உயிரும் பிரிய
தற்கொலை செய் என
விரக்தி என்னிடம்
மல்லுக்கு நிற்கும்

நான் இறந்து போனால்
வேறு யார் உனை
பார்த்து கொள்வார்
என மூளை வந்து
சமாதானம் செய்யும்

ஆசையும் ஏக்கமும்
அதிகமாய் கூடி
மனதில் பாரம் சேரும்

உன் நினைவும் பிரிவும்சேர்ந்து
விழிகளில் இறங்கி
நீர்த்துளிகளாய் ஓடும்

சொர்க்கமும் நரகமும்
வெகு அருகினில் தெரியும்


இப்படியே ஒவ்வொரு நொடிகளிலும்
ஆயிரம் மாற்றங்கள் நிகழும்

வேறொன்றும்
பெரிதாய் மாற்றமில்லை
மேற்கண்ட சில மாற்றங்களை தவிர

நீ இல்லா நிமிடங்களில் எல்லாம் . . .

எழுதியவர் : ந.சத்யா (16-Aug-18, 1:47 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 800

மேலே