யோசித்து பார்க்கிறேன்
இதோ!
யோசித்து பார்க்கிறேன்!
எண்ணங்களில் வண்ணங்களாக கலந்த உன் நினைவுகளை!
முதன் முதலில் பேருந்தில் உன்னை பார்த்த நாட்களை!
மூச்சு முட்ட ஓடி வந்து உன் முகம் காண பேருந்தில் ஃபுட் போர்ட் அடித்த நாட்களை!
இன்று என்ன கலர் உடை அனிந்து வருவாய் என எதிர்பார்த்திருந்த நாட்கள்!
என்னை எப்போது பார்ப்பாய் என ஏங்கி தவித்த நாட்கள்!
ஒரு வார்த்தை பேசி விட வேண்டும் என பரிதவித்த நாட்கள்!
இன்றாவது காதலை சொல்லி விடவேண்டும் என்று நினைத்த நாட்கள்!
இதோ!
யோசித்து பார்க்கிறேன்!