தாய்மடி ஒரு கணம் தருவாயா
![](https://eluthu.com/images/loading.gif)
காற்றடித்த திசையெல்லாம்
கடலில் ஓடும் ஓடம் போல
வீட்டை விட்டு வந்த பாதம்
வீதி கடந்ததும் நோகிறதே
பாய்மரத்தை திசை திருப்ப
பலத்த கரம் உதவுவது போல்
என் பூமனசை மகிழ்விக்க
புன்னகை ஒன்று தருவாயா
காதலில் உன் மௌனம்
சம்மதம் என்றாலுமென்
கஷ்டத்தில் உன் மௌனம்
கடுக்காய் தான் பெண்ணே
இப்பூவுலகை விட்டு பிரியுமுன்
என் கடைசி ஆசையொன்று
தனியாய் எனைக்காண வருவாயா
தாய்மடி ஒரு கணம் தருவாயா...