நட்பின் மதிப்பு
நீ என்னிடம் காதலை
சொல்ல நினைக்கிறாய் என்று
தெரிந்ததும் உன்னைவிட்டு
விலகி செல்கின்றேன் என்று
தவறாக நினைக்காதே !
காதல் எனக்கு பிடிக்காமல்
இல்லை!
எனக்கு காதலில் விருப்பம்
இல்லை என்பதற்க்காக!
முதலில் தோழனாக பழகி
பிறகு காதலை சொன்னால்
நட்பு என்னும் உன்னதமான
உறவை அவமானப்படுத்துவதாக
எண்ணி உன் காதலை மறுக்கிறேன்!
என்றும் போல் உன் அன்பை சிறந்த
நண்பனாக காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்!