ரோஜா முகம் கொண்ட ராஜா

இன்னுமொரு
சுதந்திரதின நாள்
ஆகஸ்ட் பதினைந்தில்
சுதந்திரக் காற்றை
சுவாசித்த இந்தியத்
தவப் புதல்வனின்
இதயத் துடிப்பு
ஆகஸ்ட் பதினாறில்
நின்று போனது...

அடல் பிஹாரி வாஜ்பாய்... அவர்...

நான்கு வழிச்சாலை அமைத்து
பயண நேரம் குறைத்து
நாட்டின் பொருளாதாரம் வளர்த்த
ரோஜா முகம் கொண்ட ராஜா...

இதயத்தின் பலம் உணர்த்த
கவிஞராய் கவிதைகள்
படைத்த இவரால்
இந்தியாவின் பலம் உணர்த்த
நாட்டின் பிரதமராய்
பொக்ரானில் அணுகுண்டு
போடவும் முடிந்தது...

எதிரிகள் இவருக்கில்லை...
எதிர் கட்சியினரின்
கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்
இவரைப்போல் எவருமில்லை...

தலைசிறந்த விஞ்ஞானி
அப்துல் கலாம் அவர்கள்
நாட்டின் முதல் குடிமகன்
ஆகக் காரணமாயிருந்தார்...
உலகம் பிறந்த நாள்தொட்டு
வல்லரசு நாடுகள் முதற்கொண்டு
எந்த நாடும் பெறாத
பெருமையை இந்தியா
பெற வைத்தார்...

ராஜதந்திரம் கொண்டு
நாட்டை ஆண்டவர்
ராணுவம் கொண்டு
கார்கில் வென்றவர்...
புன்னகை கொண்டு
இதயங்கள் வென்றவர்...
முன்னாள் பாரதப் பிரதமர்
அடல் பிஹாரி வாஜ்பாய்
ஆன்மா அமைதி அடையட்டும்...
🙏😭🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Aug-18, 12:27 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 206

மேலே