எனது நிலை உன்னால் மீளவும் திரும்புமா
கண்ட நாள் முதல்
உன் நினைவால் ..
இமை மூடாது
சிவந்து கிடக்கும்
எனது விழிகள் ..
உன்னிடம் சேரும் வரை
உண்ணா விரதமாம்
இங்கு வெறும் வயிற்றில்
அண்ணன் தம்பியாய்
முடங்கி அவஸ்தைப்படும்
இந்தப் பசியும் தாகமும்,,,
என் அவல நிலை போக்க
நான் தூது விட்ட
என் வார்த்தைகள்
செல்லும் வழியில்
தடுக்கி விழுந்து
செந் தேனுண்டு
பின்பு உன்கயல்
விழிக் குளத்தில்
வீழ்ந்து வெளி வாராது
அங்கேயே மூழ்கிக்
குப்புறக் கிடந்தால்
என் காதலை எவ்வாறு தான்
உன்னிடம் ஒப்புவிப்பது
என் கவலை
என்றுதான் தீருவது
என் உடலும் மனமும்
இயல்பு நிலைக்கு
எப்போதுதான் திரும்புவது......
அஷ்ரப் அலி

