கழன்றன காலங்கள்

கழன்றன காலங்கள்
============================================ருத்ரா

கண் மூடினால்
வானமும் நட்சத்திரங்களும் தான்.
கண் திறந்தால்
வறட்டு சன்னல்கள் தான்.
கண் தூங்கிப்பார்த்தால்
கனவு அடுக்குகளில்
உன் இதய அறைகளுக்குள்
புகலாமே!
உன் முகத்தாமரையில்
என்னை பதியம் இடலாமே
என்றால்
தூக்கமே வரவில்லை.
பேசாமல் "செமஸ்டர் எக்ஸாமுக்கு"
அந்த "தலையணைப்புத்தகத்தை"
புரட்டினால்
தூக்கம் வருமே!
தூக்கம் வந்தது.
நீ வரவில்லையே.
குவாண்டம் மெகானிக்ஸின்
மண்டை உடைக்கும் சூத்திரங்களே
பூதம் பூதமாய்
என்னை மிரட்டின.
மிரண்டு விழித்தேன்.
மின்விளக்கின் குமிழ் அழுத்தினேன்.
குபீரென்று ஒரு "கேரள வெள்ளம்."
வெளிச்சம் பாளம் பாளமாய்
அறைக்குள் எனக்குள் எல்லாம்
மூச்சு முட்டியது.
திடீரென்று
அந்த முகம் பார்க்கும்
கண்ணாடியில் உற்றுப்பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்!
என் முகம் அங்கு இல்லை.
நீ தான் சிரித்துக்கொண்டு
முகம் காட்டினாய்.
போதும்.
எதுவும் வேண்டாம்.
நான் அங்கு தான் இன்னும்
நின்று கொண்டிருக்கிறேன்.
கழன்றன காலங்கள்.
காலம் காட்டும் காலண்டர்கள்
எல்லாம்
இற்று விழுந்து கொண்டே இருக்கின்றன.

=======================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (20-Aug-18, 6:50 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 73

மேலே