மெய் மறந்தால் இராதை

மீன் விழியால்....
மான் விழிக்கு
வலை விரித்த மாயவனே...
அறிவாயோ... நீயும்....
உன் செவ்வாய்
இதழ் பட்டு சிணுங்கியது...
குழல் மட்டும் அல்ல......
பேதை அந்த இராதையும் தான்.....
சிணுங்கிய குழலும்
கொஞ்சும் மெல்லிசையாய்...
மங்கை அவள் செவியினுள்ளே
நின் மையலை
சொல்ல.....
மெய் மறந்து நின்றாலே அவளும்
காதல் வயப்பட்டு....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (20-Aug-18, 12:23 pm)
பார்வை : 395

மேலே