முதிர் கன்னி

முதிர் கன்னி

திருமண சந்தையில்
தீண்டப்படாத திருமேனி

காப்பி காரம் சுமந்தே
காலம் கழித்தவள்

சுமங்கலி போட்டியில்
பலமுறை முயன்றும் தோற்றுப்போனவள்

மாங்கல்ய மந்திரத்தை
மனதிற்குள் மட்டுமே
பலமுறை படித்து பார்த்தவள்

வரன் பார்க்க வந்தோர்
முகம் பார்த்தே
வயதாகிப்போனவள்

உணர்வுகளை கழுத்துக்கு கீழ் நிறுத்தி
கனவுகளை காற்றோடு
பறக்கவிட்டவள்

கனவினில் மட்டுமே
கணவனோடு வாழ்பவள்

தாம்பத்தியம் இல்லாமலே
தலையணை மந்திரம் சொல்பவள்

அப்பாவின் அழகுமுகம்
அழுதுவிடக்கூடாது என்பதற்காக
தப்பாமல் தினந்தோறும்
முகச்சாயம் பூசிக்கொள்பவள்

வந்தவர் எல்லாம்
வழித்து தின்றுவிட்டு
வயதாகிவிட்டது என்றார்கள்

அசட்டு சிரிப்புடன் நகர்கிறாள் அவள் அண்ணி
இருந்தும் அங்கேதான் வாழ்கிறாள்
இந்த முதிர் கன்னி

எழுதியவர் : இளவல் (20-Aug-18, 4:36 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 575

மேலே