மானுட நாயகன்

காந்தி

இனவெறியால் ஏளனப்படுத்தப்பட்ட மனிதன்

இனவெறியையே ஏளனப்படுத்திய மனிதன்

ஆயுதங்களுக்கு அடிபணியாத அகிம்சை

ஆயுதக்காரனையே அடிபணியவைத்த அகிம்சை

இலட்சரூபாய் சட்டை அணியத்தெரியாத அரசியல்வாதி

இலட்சியத்திற்காக சட்டையே
அணியாத அரசியல்வாதி

மதவெறியை சுட்டெரித்த ஆத்மா
மதவெறியால் சுடப்பட்ட மகாத்மா

எளிமையாக தெரிந்த இணையற்ற வலிமை
வலிமையாக திரிந்த உச்சகட்ட எளிமை

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!

எழுதியவர் : மோகா (21-Aug-18, 3:13 am)
சேர்த்தது : மோகனமூர்த்தி
பார்வை : 588

மேலே