பொய்யும் மெய்யும்
பொய்யே மெய்க்கு வழிகாட்டி
பொய்யான யாக்கை பொய்யான
வாழ்வு பொய்யான சுற்றம்
இவையெல்லாமே வெறும் பொய்
என்று தெளிந்தால் பொய்யாம்
இருள் விலகும் மெய் வெளிச்சத்தால்
மெய் ஞானம் அதுவே அதுவே ப்ரம்மம்
முக்தி இறப்பல்ல இந்த ஞானமே முக்தி
இதை இப்படி எழுதுவது சுலபம்
சொல்வதும் ஆனால் அடைவதோ
ஒரு ப்ரம்ம பிரயத்தனம் அதனால்
முயன்று அடைந்தனர் ஞானிகளும்
வேள்வி செய் முனிவரும் சித்தர்களும்
முயன்று பார்ப்போமா நாமும்
பொய்யே மெய்க்கு வழிகாட்டி.