என் புண்ணிய பூமி
சுடுசோற்றுக்கு இன்று பஞ்சமில்லை
நாளை அது கிடைக்குமோ என்ற அச்சம் மட்டுமே!
ஆங்கிலத்தை அவசியமாக்கிவிட்டாய்
என் தாய் தமிழை குப்பையில் வீசிவிட்டாய்!
பெண்சிசுவை பெற்றேன்
தோழி! சகோதரி! மகள்! பேத்தி!
என்று கூறி மொய்க்கிறது காம கண்கள்!
சமாதிகளும் மணிமண்டபகளும் உண்டு
ஏழைக்கு குடிசை கூட இல்லை!
விவசாயத்திற்கு பணம் இல்லை
ஆனால் உணவிற்கு வரி உண்டு!
கோரிக்கைகள் ஆயிரம்! கேள்விகள் ஆயிரம்!
புகார்கள் ஆயிரம்! புலம்பல்கள் ஆயிரம்!
இது தான் எங்கள் (புண்)ணிய பூமி!?