இறைவன்
குழந்தையின் சிரிப்பில்
அது பேசும் மழலையில்
அது செய்யும் விஷமத்தில்
கடலலையின் ஒலியில்
ஓதும் வேதத்தின் ஒலியில்
தன்னையுணர்ந்த ஞானியின்
ஒளிரும் முகத்தில்
ஓடும் நதியின் ஒய்யாரத்தில்
இயற்கையின் ஒவ்வோர் பசுமையில்
சுடர்ந்தெழும் வேள்வித்தீயில்
வாழவைக்கும் கதிரவன் ஒளியில்
குளுமைபொழியும் சந்திர ஒளியில்
வேளாண் மக்கள் சிரிப்பில்
இப்படி எங்கும் நிறைந்துள்ளான்
உயிரிக்குள் உயிராய் இயங்கியே
ஒளியாய்,ஒலியாய்,அருவமான, உருவமாய்
அவனே இறைவன்,அவனே 'பரப்பிரம்மம்'
இன்னும் அவனைக் காணவில்லை
என்று கூறினால்-நமக்கேன்
காண கண்ணும், கேட்க காதுகளும்
எல்லாம் அறிந்திட 'அறிவும்'
'திருவாய்' அறிந்திடத்தான் இவையெல்லாம்
என்பதனாலேதான் இவை அவன் தந்தான்
காணவில்லையே 'அவன்' என்று கூறின்
அவனது செய்வான்
கண்முன்னாலே அவன் காட்சிதந்தும்
இன்றே காணுங்கள், இன்றே கேளுங்கள்
இன்றே அவனை 'அறிந்திடுவீரே'