💛❤உனக்கு பிடிக்கும் என்று💛❤
வானில் நிலவுதிக்க
நிலத்தில் அல்லி பூக்க
இருள் சூழ்ந்த நேரத்திலும்
இன்று ஏதோ ஓர்
வெளிச்சம் பிரவேசிக்கிறது
விடிந்தவுடன் அவளுக்கு
பிறந்தநாள் என்பதாலோ!
காலை கதிரவனும்
கண் சிமிட்டி சிமிட்டி
பகலொளியில்
மினுமினுப்பு கூட்டுதே
இன்று இவள்
இப்பூமி பிரபஞ்சத்தில்
பிரசவிக்கப்பட்ட நாள்
என்பதாலோ....!!!
அடடா என்ன
அழகுற புன்முறுவல்
காட்டுதே இந்த
மலர்களெல்லாம்
இன்று சிரிப்பதில் கூட
ஏதோ மெருகூட்டி சிரிக்குதே
என்னவளின் கூந்தலில்
சூடிய பிறகு வாடிய பிறகு
அவளுடன் வாழ்ந்தேன் என்ற
இன்பம் காணப் போவதாலோ!
அன்பே!
வறண்ட நிலமாக இருந்தேன்
மாமழையென நீ வந்தாய்
இந்த கல்லையும்
குடைந்து கோபுரமாக்கினாய்
எனக்கும் உன்னுயிர் ஊட்டி
புத்துயிர் அளித்தாய்
ஆழ்கடல் முத்தெடுப்பேனோ
அந்தி வான நிலவெடுப்பேனோ
என் ஆனந்த யாழே!
என்ன நான் உனக்கு
பரிசளிக்க
சிந்தனையில் மூழ்கி
கரையோர வெதுவெதுப்பு
சூட்டில் காய்ந்து எழுந்தேன்
பிறகு என்னையே
பரிசளித்தேன்
உனக்கு பிடிக்கும் என்று....!!!!