கோதையின் காதலில்---பாடல்---
மானா மதுர மாமரக் கிளையிலே மெட்டில் :
பல்லவி :
கோடை வெயிலில் கோதையின் நினைப்பிலே
வத்தல் என வெந்து காயுது காயுது கண்ணன் நெஞ்சு...
பூந்தென்றல் வந்து தொடுதே...
தீ தந்து என்னைச் சுடுதே...
நீரைக் கேட்கும் நிலம் போன்றே
கண்ணு தான் வாடுதே...
வேத்துக் கொட்டயிலே காத்தாய் வந்தவளே
ஒன்னாலே தூக்கம் தொலைச்சேன்...
பஞ்சு மெத்தையிலே முள்ளின் கொடுமை கண்டேன்
நாளும் இந்தத் துன்பம் கொண்டேன்...
விழிகளின் பார்வை இன்று மெல்ல மெல்ல குறைகிறதே உனைத் தேடி...
உயிர்வரை அமுதும் நஞ்சும் ஒன்று சேர்ந்து வழிகிறதே மனம் வாடி...
சரணம் 1 :
வந்தாளோ?... வந்தாளோ?...
காற்றில் கரைந்து வந்தாளோ?...
பூவெல்லாம் பூக்கக் கண்டேன்...
சென்றாளோ?... சென்றாளோ?...
என்னைக் கடந்து சென்றாளோ?...
பூவாசம் வீச நின்றேன்...
நினைவெல்லாம் தேன் பிழிகிறதே எனைக் கொஞ்சியே...
நிஜமெல்லாம் தேள் இழைகிறதே மனம் அஞ்சவே...
நின்றேனே நின்றேனே
ஒத்தப் பனையாய் நின்றேனே
தினம் காத்தும் சோகந்தானே...
விழிகளின்...
கோடை வெயிலில்...
சரணம் 2 :
தின்றாளே தின்றாளே
எந்தன் நெஞ்சைத் தின்றாளே
கிளியாக கொத்தித்தானே...
கொன்றாளே கொன்றாளே
வாழும் போதே கொன்றாளே
நரகம்போல் மாற்றித்தானே...
எலிகளை போல் குடைகின்றதே ஒரு வேதனை...
வலிகளுமே தொடர்கின்றதே பெரும் சோதனை...
தாங்காதே தாங்காதே
அன்பின் உள்ளம் தாங்காதே
இமை கூட பாரந்தானே...
விழிகளின்...
கோடை வெயிலில்...