அன்புக் கணவனே
*முதன் முதலாய் பார்த்த நொடி..
முதன் முதலாய் பேசிய வார்த்தை..
முதன் முதலாய் நான் தந்த பரிசு..
ஞாபகம் இல்லை உனக்கு!
*முதன் முதலாய் எங்கு சென்றோம்?
முதன் முதலாய் எதை ரசித்தோம்?
முதன் முதலாய் என்ன
உணவருந்தினோம்?
மறந்து போனது உனக்கு!
*எனது முதல் வெட்கம்!
எனது முதல் கோபம்!
எனது முதல் அழுகை!
நினைவில் நிற்பது கடினம் உனக்கு!!
*எனது பிறந்த நாள்..
நமது திருமண நாள்..
உனது பிறந்த நாளும் சேர்த்து..
ஞாபகப்படுத்துகிறேன் நான்
உனக்கு!
ஆனாலும்...
நீ என்னை நேசிக்கிறாய்!
என்னை மட்டுமே சுவாசிக்கிறாய்!!
காலச்சக்கரத்தின் சூழல் கைதியாய்
எதை நீ மறந்த போதும்
என்னை நீ நேசிக்கிறாய்
நேசத்தின் வாசம்
கொஞ்சம் கூட குறையாத
அந்த முதல் தருணம் போல்!!!
இப்படிக்கு,
ஏதேதோ கேட்டு சண்டையிட்டாலும்
ஓயாது அழுது ஆர்ப்பரித்தாலும்
உன் வாசத்தில் கூட
முழுமையாய் நேசம் உணர்ந்த
ப்ரிய மனைவி!!