கண்ணன் தேடும் காதல் இராகம்---பாடல்---

இராகங்கள் பதினாறு மெட்டில் :


பல்லவி :

வீணைமேல் விரலாக எனைமீட்டும் உறவாக
தேன் சிந்தும் கானம் மயக்க வந்தேன்... (2)
இசைபாடும் பெண்பூவை விழியில் கண்டு
இதழோடு பேசும் மொழி தேடினேன்... (2)


சரணம் 1 :

குயில் ஒன்றின் சங்கீதம் உயிர் தீண்டும் நேரம்
மயில்பீலி மலராகி மணம் வீசுது... (2)
நதியோடு அலை துள்ளும் மானின் பொற்பாதம்
இராதை போல் நடம் ஆட காதல் கொண்டேன்... (2)


சரணம் 2 :

உடல் செல்லும் புனல்போல இமை நீங்கும் பார்வை
இதயத்தின் நரம்பெங்கும் இழைந்தோடுது... (2)
துளை மூங்கில் குழல் ஊதும் மோக கீதங்கள்
நாணத்தில் பிறந்தோடும் மாயம் கண்டேன்... (2)

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 2:28 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 69

மேலே