மீண்டும் வேண்டும் ஈழம்

மீண்டும் வேண்டும் ஈழம்

மறைபோற்றும் ஈழத்தமிழகத்தை
வரலாற்றுப்பிழை செய்து
சிரமற்ற முண்ட சிங்களவன்
கைகளிலே
அறமற்று அளித்துப்போன
ஆங்கிலேயே அதிகாரிகளே
பார்த்தீரா எம் கோலத்தை
பரிதவிக்கும் எம் சீர்நிலத்தை
உலகத்தின் ஒப்பற்ற சபையோரே
உத்தமர்தாம் நீரெல்லாம் என
உமைசார்ந்து ஊமையாய்
அறப்போர் செய்த எம்
மறத்தமிழன் நல் தீர்ப்பு
நீர் நல்குவீரென்று நயந்திருந்த
நன்னிலத்தின் மக்கள் நிலை பாரீரோ
அமைதி படைகள் எல்லாம்
அரிதாரம் பூசியதை கண்டீரோ
மார்துளைத்து எம் மழலையர்
மாண்டது பார்த்தீரா
எம் சித்திரை பெண்களின்
நித்திரை தொலைத்தது யார்?
சீர்கெட்ட சிங்கள வெறியன்
எம் பெண்களின் மாரறுத்து
மலைபோல குவியலிட்டு
பக்கத்தில் இலை போட்டு
பரிகாச படையலிட்டு
செவி கிழிய
சிரிக்கின்ற சத்தம் கேட்டிரோ

நான் பிறந்த நன்னிலத்தை
நாய்கள் வேட்டையாடுவது நலம்தானா?
இந்த விஷப்பாம்பின் பல்பார்த்து
பயந்தோடும் பருந்தல்ல யாம்


இன்னும் ஒரு தமிழீழம்
அமையாமல்போகாது
இழந்தது கண்டு வருந்துகின்ற
இனமல்ல என் தமிழினம்
முன்னூறு முள்ளிவாய்க்கால் ஆனாலும்
என் செந்நிற பூமியை வெண்ணிறமாக்க
சிரித்துக்கொண்டே வரிசையாய்
சிரம் கொடுப்போம்
மறத்தமிழனின் அறத்தை நீ
வெறுத்த பிறகு
அகிம்சையும் அறப்போரும்
ஐநாவுக்கும் அரசியல் சபைக்கும்
மத்தளம் தட்டுவதற்கு என்று
அறிந்து கொண்டான் மானத்தமிழன்
ஓ மண்ணுக்குள் புதையுண்ட
மறத்தமிழ் மாவீரர்களே
உங்கள் கல்லறைகளின் மேல்
ஈழத்தமிழகத்தின் வரைபடத்தை
பார்க்கின்றேன்
உடமை இழந்தீர்கள் சுட்டார்கள்
உறவை இழந்தீர்கள் சுட்டார்கள்
உடையை இழந்தீர்கள் கெடுத்தார்கள்
உயிரை இழந்தீர்கள் சிரித்தார்கள்
வரலாற்று பதிவேடுகளில்
வார்த்தெடுக்க உங்கள் விலாசம் கூட
கிடைக்கவில்லையே
பாரதத்தாயே உண்கணுக்காலின்
பகுதி களவாடப்பட்டதே
கவனிக்க மறந்துவிட்டாயோ -இல்லை
களவாட கதை எழுதி கொடுத்தாயோ

வானிறைக்கும் குண்டுகளோடு
வந்திறங்கிய வந்தேறிகளே
வாருங்கள் இப்போது
என் சிறுபருவம் முடிந்து
சிந்தை தெளிந்துவிட்டது
எம் மானபெண்களின்
குங்குமம் அழித்து குருதி குடித்த
வாடை எம்மை வந்து அடைந்துவிட்டது
இனி செய்வோம் ஓர் ஈழப்போர்
கருவோடு விளைந்த கரும்புலிவீரம்
காலத்தின் நீட்சியில் கரைந்துவிடாது
முப்படைக்கொண்டு சத்திய வழியில்
செத்திட்ட எம் தமிழ் இனத்தலைவன்
வித்திட்ட வழியில்
முத்தமிழ் மக்கள் முன்வர
மணல்தரை மணந்த எம்
மரத்தமிழ்ப்புலி மாவீரர்களின்
மரணக்கல்லறையில் சபதமிட்டு
நன்னிலம் காக்க நண்ணுயிர் ஈந்த
நம்மவர் வழியில்
கேட்டுப்பெற்றால் கிட்டாதன
மதுரையை எரித்த
மாசாத்து வணிக மகள்
தமிழ்த்தாய் கண்ணகியின்
கரம் பற்றி
இன்னுயிர் நீத்த
ஈழத்தமிழின தலைவன்பால்
உறுதிகொள்வோம்
தமிழீழமே என் தாயகமே
உன் உச்சிமேல் எம் புலிக்கொடி பறக்கும்
தமிழீழம் மீண்டும் பிறக்கும்

எழுதியவர் : இளவல் (22-Aug-18, 9:49 am)
சேர்த்தது : இளவல்
பார்வை : 81

மேலே