அவள் அழகு
கயலிரண்டு துள்ளும்
மதிமுகமோ உந்தன்
பொன் வதனம் -சிவந்த
அந்தி வானம் தந்ததோ
உந்தன் உடல் வண்ணம்
கொஞ்சும் உந்தன்
செம்பவள வாய்திறக்க
நீ சிரித்த சிரிப்பில்
சிந்தியதோ முத்துக்கள்
என்று நினைத்தேன்
உந்தன் மயில் அசைவில்
நளினம் கண்டேன் நான்
அதில் கண்டேனே
மின்னல் இடையொன்று
செந்தில் கொடியாய்
பேசும் உந்தன் விழிகளில்
கண்ணம்மா என் மனதில்
அலைமோதின எண்ணங்கள்
எத்தனையோ எத்தனையோ
அத்தனைக்கும் எழுத்தில்
வடிவமைக்க எண்ணியனான்
ஒரு பக்க காதல் கதையா
குறு நாவலா, இல்லை
முழு நீள காதல் காதல்
காவியமா எப்படி எழுத
என்று எண்ணியபோது
உன் கண்கள் என் காது
கொடுத்து கேட்கும்படி
பேசியது போல் ஓர் உணர்வு
என்னைத்தாக்கியது ,இப்படி
சொல்லி " இந்த விழிகளின் பார்வை
சொல்லிற்கும் பாவிற்கும்
அப்பாற்பட்ட பேரழகு ................"
வாயடைத்துப்போனேன்
இந்தளவோடுஉந்தன் அழகையும்
உந்தன் விழிகளின் பார்வையையும்
எழுத்தில் அடக்க .................நிறுத்திக்கொண்டேனடி
கண்ணம்மா.
.