வேண்டாமே

காட்டில் பெரிய விலங்கதனைக்
கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
நாட்டில் நல்ல வேலைசெய்ய
நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
கோட்டை விட்டு விடுகின்றீர்
குணமது கெட்ட மானிடரே,
காட்டிப் பிழைத்தது போதுமய்யா
கையால் பிச்சை வேண்டாமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-Aug-18, 7:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vendaamey
பார்வை : 115

மேலே