நன்றிகள்-- 2

( எழுத்து இணையதள உறவுகளுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள். நான் இந்த இணையதளத்தில் இணைந்து இன்றோடு இரண்டு வருடம் ஆகின்றது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்த தருணத்தில் என்னை இந்த இணையதளத்தில் சேர்த்த எனது அன்பு அண்ணன் "அன்னை ப்ரியன் மணிகண்டன்" அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று கவிதை ஒன்றினை சமர்பிக்கிறேன். அதோடு நான் கவிதை எழுத தொடங்கிய நிகழ்வுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். விருப்பம் இருந்தால் படித்துப் பாருங்கள்.)


பிறர் வளம் பெருகின்ற
ஆற்றினைக் (நதியினை) கண்டவன்
அதன் அருகில் நடந்தேன்
நாணத்தினை தொடர்ந்தேன்!!

தானாக துள்ளியாடும்
அந்த (அன்பு) வெள்ளத்தில்
தானும் நனைய
ஆசைக் கொண்டேன் -- அதில்
ஆழ்ந்தும் இறங்கினேன்!

ஓடும் நதியானது
ஒருபோதும் நடக்காது
என்பதை தெரியாமல் நான் -- அதில்
என் பாதத்தினைப் பதித்தேன்!!

ஆற்றின் (அன்பு) வெள்ளத்தில்
பாதம் பதித்தவன்
அதன்மேல் பரவசத்தினைக் கொண்டு
என் பகுத்தறிவினை இழந்தேன்

பாதத்தினை நனைத்த
அந்த (அன்பு) ஈர அலைகள்
என்னை விட்டு
தூரம் போகும் வரை -- இன்பத்தில்
துள்ளி விளையாடினேன்
தூண்டிலுக்கு இரையாகினேன்!!

ஈர அலைகள்
தூரம் போன பிறகுதான் -- ஆசைகளை
துறந்து வாழத் தொடங்கினேன்!
அதோடு துன்பப்பட்டும்
வாழத்தொடங்கினேன்!!

அதுவரை ஆற்றில்
நடந்து பார்த்தவன் -- அதன் பிறகு
ஆகாயத்தில் மிதக்கத் தொடங்கினேன்!
காற்று வீசும் திசையில்
காகிதத்தோடும்
கையில் பேணாவோடும் பறந்தேன்!!

பறவைகளோடு வானில் பறந்த
என் நெஞ்சத்தில்
என்னையறிமால் என்னுள்
எரிதழலொன்று பற்றியது!!

நெஞ்சத்தின் ஒரு முனையில்
பற்றிய தீயானது
முழுவதும் என்னிடம் பரவியது

எரிந்த "தீத்துளிகள்"
எங்கெங்கோ கருகி விழுந்தது -- கருகிய
துளிகள் சில வரிகளை
விதைத்தது! அதில்
என் வலிகளை மறைத்தது!!

"உயிரின் ரணத்தை"
உறவுகளுக்கு காட்ட மறந்தேன்!
உறவின் கண்களுக்கு
ரணத்தினை காட்டாமல்
மறைத்தவனால் -- அதனை
"உரிமையானவனிடம்"
மறைக்க முடியாமல்!
முழுவதுமாக அவனிடத்தில்
காட்டினேன்!!

சில மாதங்கள்
அவனை பிரிந்த வேளையில்
சிந்திக்க முடியாமல்
நான் விழுந்த சித்திரத்தின் மேல்
சினம் கொண்டான்!!

முழு விவரம் தெரியாமல்
சினம் கொண்டவன்
சிந்தித்த பிறகு -- அதனை
தன் உடன் பிறப்பாக ஏற்றான்!!

நெஞ்சத்தை சிதைத்து
கொண்டிருக்கும் தீத்துளியானது!
நீர்துளியாக இருந்திருந்தால்
நிலமாவது வளம் கண்டிருக்கும்! ஆனால்
நெஞ்சானது வெண்பஞ்சாய் இருந்ததால்
முழுதாய் வெந்து தனிந்தது!!

நீரென்று பாதத்தை
நனைத்ததின் விளைவு -- இன்று அது
நினைவின் அலைகளாக
ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கின்றது!

"உரிமையானவன்" என்னை
பல நாட்கள் அழைத்தான்!
வடித்த வரலாற்றினை
வாசித்தான்! என்னை நேசித்தவன்
என்னால் உருவாகிய
வரிகளையும் நேசித்தான்!!

"என்மேல் இரசிகனான அவன்"
அவன் வாழ்வில்
எனக்கும் இரசிகனானான்!

தீயிலும் சுடர்தான்
திங்களிலும் சுடர்தான்
தீயில் சுடராக இருந்தவனை
திங்களின் சுடராக மாற்றினான்...

தீயின் சுடராக இருந்தவரை
தீண்டிப் பார்க்க பயந்தவர்கள்!
திங்களாக மாறிய பின்பு
திசைகளுக்கு காவலாக நினைத்தனர்....


நெஞ்சின் வலிகளை "மொழிபெயர்க்க"
முழுவதுமாக அண்ணனிடம்
அறிமுகப்படுத்தினான்!

இதய வலிகளை பகிர்ந்து கொள்ள
"இதோ இந்த இணையதளத்தில்"
இணைத்தார் ! அறிமுகத்தில்
அச்சம் கொண்டவன்
அதன் பிறகு அதன் மேல்
ஆசைக் கொண்டேன்!!

பேணாவும் காகிதமும் பிரியாமல்
இந்த "பிரியனை "
பின் தொடர்ந்தது....

உணர்வுகளை மொழிபெயர்த்தேன்
உறவுகள் ஊக்கம் கொடுத்தது...!

வலிகளை வெளிகாட்ட முயன்றேன்
வாசகர்களால் நேசிக்க
தொடங்கினேன்...!!

கவலைகளை கட்டவிழ்த்தேன்
கருத்துக்கள் கடலலைகளால
கணக்கில்லாமல் போனது...!!!

நம்பிக்கையை விதைத்தேன்
நாடுகளை கடந்து
நலம் விசாரிக்கப்பட்டேன்...!!!!

இனி எண்ணத்தை
சமர்பிக்க உள்ளேன் - அதுதான்
என்னவாகுமென்று தெரியாமல்
திகைக்கிறேன்....!!!!!

இதுநாள் வரை
தலையெழுத்தும்
கையெழுத்தும்
வடிவமில்லாமல் கிடந்தவன் வாழ்க்கை!
இந்த இணையதளத்தில் தான்
சிறகடிக்கத் தொடங்கியது!! சிறகுகள்
நீளும் நொடிகளில்
சில சிந்தனைகளும் நீண்டது!!!

நிரத்தால் ஒதுக்கப்பட்டவன்
நிரந்தரமாக பலரால்
இரசிக்கப் பட்டேன்

சில உறவுகளால்
வெறுக்கப்பட்டவன் -- இங்கு
பல உறவுகளால் எதிர்பாராமல்
நேசிக்கப்பட்டேன்!

எதிர்பாராத உறவுகளால்
நேசிக்கப் பட்டவன் -- இன்று
நெஞ்சம் நிறைந்து
"என் அன்பு உறவுகளுக்கு" சொல்கிறேன்!
எனது நன்றிகளை...!!!


(நான் கடந்த இரண்டு வருடங்களாக "இந்த எழுத்து இணையதளத்தில்" சமர்பித்து வருமா எனது கதை,கவிதை,கட்டுரை,நகைச்சுவை ஆகியவற்றை படித்துவருகின்ற வாசகர்களுக்கும்; எனது நண்பர்களுக்கும் நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னையும் இந்த இணைய குடும்பத்தில் இணைத்துக்கொண்டு ; எனது இன்பம் துன்பம் இரண்டையும் பகிர்கின்றபோது ஆதரவாக நிற்கும் என் நண்பர்களுக்கும்,வாசகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்)

இப்படிக்கு
நன்றிகளுடன் நண்பன்
-- செந்தமிழ் பிரியன் பிரசாந்த்--

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-Aug-18, 7:44 pm)
பார்வை : 272

மேலே