நேரிசை வெண்பா போட்டி
கவிதைப் புலனக் குழுமத்தில், வெண்பா போட்டி அறிவிக்கப் பட்டது, முதலிரண்டு அடி கொடுத்தபின் பின்னிரண்டு அடி எழுதவேண்டும். நேரிசை வெண்பா மட்டுமே எழுதவேண்டும். நான் எழுதிய வெண்பாக்கள் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது கொடுக்கப்பட்ட முன்னிரண்டு அடியைத் தொடரும்போது அது "ஆசிரியரைப் பற்றி" இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்ட விதிகளில் ஒன்று.
வெண்பா=1
=========
கல்வியில் பக்தியும் கற்பதில் புத்தியும்
வெல்வதில் வீரமும் வேண்டிடச் - சொல்லாசான்
ஆற்றலைக் கண்டுணரக் கேட்டதும் ஏற்றுக்கொள்.!
போற்றி யவரைப் புரிந்து.!
============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
============================
வெண்பா=2
==========
கல்வியை வென்றிடக் கற்பிக்கும் ஆசானின்
கல்வி யறிவாலே கைகூடும் - வல்லவனின்
கல்வியால் பெற்றக் கலையும் செயல்களும்
வல்வினை வெல்லவுமோர் வாய்ப்பு.!
============================
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
============================
வெண்பா=3
==========
கல்விக்கோர் எல்லையில்லை வானமே எல்லையாம்
கல்வி பயின்று கரைசேர - எல்லாக்
கலைகளும் தந்தருளும் கல்வி யறிவு
கலையுலகம் வாழ்த்தும் கலை
============================
இரு விகற்ப நேரிசை வெண்பா
============================
வெண்பா=4
===========
கல்லா தவரென்றால் கம்பால் அடிப்பாராம்
நல்லானும் ஆவாரே.! நல்வாக்கால் - செல்வந்தர்.!
வல்லானும் ஆவான் வகுப்பா சிரியரவர்.!
பல்லாரும் போற்றும் பணி.!
============================
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
============================