பாதியில் முடிந்த வாழ்க்கை -2

நிதிஷ் : நான் தூங்க போறேன் . நீ அங்க தூங்கு
ஆர்த்தி : இல்லைங்க. நான் ப்ரண்ட் வீட்டுக்கு போறேன்.
நிதிஷ் : அர்த்த ராத்தரி வேண்டாம். நாளைக்கு போலாம்.
ஆர்த்தி : அவளுக்கு கல்யாணம்! பார்ட்டிக்கு கூப்பிடுறா ப்ளீஸ் டிரைவர்
வீட்டுக்கு அனுப்பறேன்னு சொன்ன பிலீஸ்ங்க
நிதிஷ் : நீ என்ன சொன்னாலும் முடியாது. சரியா போய் தூங்கு.
ஆர்த்தி : (அழுக ஆரம்பித்தாள்) நா என்ன கேட்டேன் என் ப்ரண்ட் வீட்டுக்கு
போறேன்னுதான சொன்னேன் .
நிதிஸ் : எந்த ப்ரண்ட்
ஆர்த்தி : என் .கயல்விழி
நிதிஷ் : சரி நானே வந்து விடறேன்
ஆர்த்தி : என் மேல சந்தேகபடுரியா
நிதிஷ் : இல்லைம்மா அதுவந்து
ஆர்த்தி : நா போகல போதுமா
நிதிஷ் : சரி உன் இஷ்டம் . நா தூங்கறேன்.
ஆர்த்தி : என்னங்க.ப்ளீஸ்
நிதிஷ் : சரி போயிட்டு வா
ஆர்த்தி : தேங்க்ஸ்ங்க
நிதிஷ் : சீக்கிரம் வரணும்.
ஆர்த்தி : சரிங்க
நிதிஷ் : (டிரைவர் நம்பர் நோட் பண்ணினான் ) மேடம் அங்க இறங்குனதும்
கால் பண்ணு. சரியா ரோட்டை பார்த்து ஒட்டு . இடையில
நிப்பாட்டாத. பிரச்னைனா கால் பண்ணு. சரியா
ஆர்த்தி : போதும். நிப்பாட்டுங்க மணி ஆச்சு .
(நிதிஷ் உள்ளே சென்றான். வண்டி கேட்டை விட்டு வெளியே சென்றது. )
ஆர்த்தி : (கைப்பேசியில்) நான் வந்துட்டு இருக்கேன் வை
மறுகுரல் (ஆண்) : சீக்கிரம் வா
மறுநாள் ஆர்த்தி வரவில்லை.
நிதிஷ் டிரைவர்க்கு போன் பண்ணினான். தொடர்பு கொள்ள முடியாது என கம்ப்யூட்டர் குரல் ஒலித்தது.ஒன்றும் புரியாமல் திணறினான்.
------------------------------------------------------------------------------------------------------------
ரோஷன் : அக்கா எங்க இருக்க ? அக்கா
வேலைக்காரன் : சார் , மேடம் இந்த லெட்டரை உங்க கிட்ட கொடுக்க
சொன்னாங்க .
ரோஷன் : சரி நீ போ
(கடிதத்தை படித்தான்) ஹாய் ரோஷன் என்னை மன்னிச்சுடு நான் இந்தியா கிளம்பிட்டேன். தேடாத . நான் இந்நேரம் நடுவானில் இருப்பேன். இப்ப நான் அம்மாவ பார்த்துட்டு 3 மாதம் கழிச்சு தான் வருவேன். ஆபீஸ்ல சொல்லிட்டேன் . ஒழுங்கா படி

எழுதியவர் : நிவேதா (25-Aug-18, 2:44 pm)
சேர்த்தது : நிவேதா
பார்வை : 238

மேலே