பாதியில் முடிந்த வாழ்க்கை -1

நான் எழுதும் முதல் கற்பனை கதை. இதில் தவறுகள் இருந்தால் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம் திருமணம். அப்படிப்பட்ட தருணம் வரும் பொழுது வரும் சந்தோசம் அளவில்லாதது. அதுவும் நேசித்த மனிதரையே திருமணம் செய்வது கொடுத்துவைத்த ஒன்று.
கதையின் ஹீரோயின் பெயர் ராகினி.அவள் கணக்கியல் ஆய்வாளர் துறையில் படித்து முடித்து உயர்ந்த பதவியில் பணிபுரிகிறாள் .அவளது தாயார் சிறு வயதில் இறந்தது விட்டார்.அவளது தந்தையார் சொத்து பிரச்சனை காரணமாக அவரது உறவினர் கொன்றுவிட்டனர்.அவளுக்கு அண்ணன் தம்பி 2 பேர் உள்ளனர். அண்ணன் திருமணம் முடிந்த சில மாதங்களில் சென்று விட்டான். அவளும் அவளுடைய தம்பி ரோஷன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள் . அவளுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. தம்பி மட்டும் தான். இனி பார்ப்போம் எப்படி போகிறதென்று பார்ப்போம்.

கதையின் ஹீரோ நிதிஷ். டாப் பிசினஸ் மேன்ல ஒருத்தன். இவனுக்கு சொந்த பந்தங்கள் ஏராளம். தற்போது இல்லை. காரணம் இவன் காதல் திருமணம் செய்ததால் அவனது தந்தைக்கு பிடிக்கவில்லை.தற்பொழுது தனியாக வசித்து வருகிறான்.

இனி இவர்கள் இருவருக்கும் எப்படி சந்திப்பார்கள்? இவர்கள் இருவருக்கும் இடையில் திருமணம் எப்படி நடக்கும்? இவர்கள் இடையில் எப்படி காதல் மலரும் என்று பார்ப்போம்?

ராகினி : டேய் ரோஷன் என்ன பண்ற ?
ரோஷன் : பார்த்தா தெரியல
ராகினி : தெரியுது சொல்லு
ரோஷன் : அக்கா! வேலை பார்க்குறேன்
ராகினி : என்ன வேலை
ரோஷன் : ஏன் இப்படி என்னை உயிரை எடுக்கற
ராகினி : நான் எப்ப எடுத்தேன்
ரோஷன் : சரி இப்ப என்ன வேணும்
ராகினி : என்ன பண்றன்னு தான கேட்டேன். ஏன் இப்படி எரிஞ்சு விழுற
சரி உன் உதவி வேணும்.
ரோஷன் : என்ன உதவி அக்கா
ராகினி : நான் இந்தியா போகணும்
ரோஷன் : எதுக்கு அங்க போற நீ இப்ப அங்க போகக்கூடாது
ராகினி : நா அம்மாவ பார்க்க போகணும். மனசும் சரி இல்லை. போயிடு வந்த
நல்லாயிருக்கும். ப்ளீஸ் அப்படியே கோயில் , தாஜ்மஹால்
எல்லாத்தையும் பார்த்துட்டு வரேன்.
ரோஷன் : சரி நானும் வரேன்
ராகினி : நா தனியாவே போறேன்
ரோஷன் : நோ வே. இப்பவே அண்ணனுக்கு போன் பண்றேன்
ராகினி : சரி நான் போகல.போதுமா நான் போய் வேலையை பார்க்குறேன்.
-------------------------------------------------------------------------------------------------------
நிதிஷ் : ஆர்த்தி என்ன பண்ற வா நாம போகணும் ரொம்ப லேட் ஆச்சு
ஆர்த்தி : ஏங்க இப்படி பறக்குறிங்க.
நிதிஷ் : சொல்லுவ சொல்லுவ ஏன் சொல்லமாட்ட. இது என் தம்பி
கல்யாணம் வா சீக்கிரம் போகணும்
ஆர்த்தி : போன என்ன நடக்கும் நாம பண்ண காரியத்துக்கு உங்கப்பா
திட்டுவார்.
நிதிஷ் : போதும் ரெடி ஆயிட்டியா போலாமா தாராளமா
ஆர்த்தி :ம்
-----------------------------------------------------------------------------------------------------------------
சேகரன் : நிதிஷ் நில்லு உன்னை யாரும் கூப்பிடலையே
நிதிஷ் : அண்ணா அது
வெங்கட் : மிஸ்டர். நிதிஷ் வாங்க மாப்பிளை இவர் என் கம்பெனில வேலை
செய்றார் . ரொம்ப நேர்மையான மனிதன்.
சேகரன் : ஓ அப்படியா வாங்க !
குணா: அண்ணா ! இவன எதுக்கு உள்ள விட்டிங்க
சேகரன் : இவன் நம்ம சம்மந்தி கம்பெனில வேலை செய்யுறான்.
நம்மாள ஏதும் செய்ய முடியாது. அமைதியா இரு. அப்பாட்ட
சொல்லிடு.
குணா : சரி அண்ணா!
(திருமணம் நன்றாக முடிந்தது.வீட்டில் உள்ளவர்கள் கோபம் குறையாம இருந்தனர்.)
ஆர்த்தி : என்னங்க உங்க வீட்டுல யாருக்குமே கோபம் குறையல
நிதிஷ் : அது கொஞ்ச நாளைக்கு தான். குழந்தை பிறந்தா சரியாயிடும்.
(கிட்ட வந்தான்)
ஆர்த்தி : மறந்துட்டீங்களா
நிதிஷ் : (சற்று விலகி) மன்னிச்சுடு
ஆர்த்தி : ஏங்க கோச்சுக்காதிங்க
நிதிஷ் : கல்யாணம் ஆகி 1 வருஷம் ஆச்சு உன் நிழலை கூட நெருங்க
முடியல
ஆர்த்தி : குடும்பத்துல உள்ளவங்க நம்மள ஏத்துக்கட்டும்
நிதிஷ் : அது இந்த ஜென்மத்துல நடக்காது.

எழுதியவர் : நிவேதா (25-Aug-18, 1:43 pm)
பார்வை : 341

மேலே