நான் செய்வது

கற்சிலையாய் வடித்து
பொற்பாதம் தொழுவேன்
சிறுதூரம் விலகியிருந்து
பெரும்பாவம் செய்யேன் !...
கனவிலும் உனையே
உணவாகக் கேட்பேன்
தினந்தோறும் எனையே
மணமாலையாகத் தொடுப்பேன் !..
ஆடிக்காற்று வீசியபோதும்
தேடியுன்னை அடைவேன்
கோடியழகிகள் அணைத்தாலும்
வெடியாய் வெடிப்பேன் !...
விழிகளின் மாயத்தை
அழியாமல் பாதுகாப்பேன்
சுழியொன்று செய்துவிட்டால்
இழிவென்று கருதமாட்டேன் !...
இருக்கமான உடையணிந்தால்
சுருக்கமாக தண்டிப்பேன்
நறுக்கென்று கில்லிவிட்டால்
சுருக்கென்று திட்டுவேன் "...
எழுத்தோடு இணையும்
...#ராஜேஷ்...