என் பறவைக்கொரு விண்ணப்பம்

வானத்தின் முகடுகளை முகர்ந்து 
நீர்விழ்ச்சியில் ஆனந்த நீராடி 
மலை சிகரங்களில் தலைதுவட்டி
தன் உலகுக்கு அழகூட்டி
வாழ்க்கைக்கு மெருகேற்றி
சிறகடித்து சுற்றித்திரியும்
சுதந்திர பறவையோடு
கூட்டுக்குள் அகப்பட்ட
கூண்டுப் பறவையாய்
கனவில் தினம் பேசும்
கனவுப் பெண்ணே...

நிச்சயம் ஒருநாள்
அச்சுதந்திர பறைவையாய்
நீயும் சிறகடித்து பறப்பாய்
சிகரம் சென்று ரசிப்பாய்
காடுகளோடு கதைத்து செல்வாய்
மழைத்துளிகளின் மனதை வெல்வாய்
வானவில் உனக்கு வண்ணமடிக்கும்
இயற்கை உன்னில் இசைபடிக்கும்
சுதந்திர தென்றல் உன்
சுவாசமாகும் அந்நாளில்
உன்னுலகம் காட்ட இந்த
சிறகிலந்த சுதந்திர பறவையையும்
உடன் அழைத்துச் செல்வாயா....

எழுதியவர் : அக்பர் ஷரிஃப் (28-Aug-18, 12:12 pm)
சேர்த்தது : அக்பர்
பார்வை : 83

மேலே