கிருஸ்துமஸ்

கிருஸ்துமஸ்

மழலை மொழி பேசக்கூட
மாதங்கள் ஆகவில்லை
மனுமகன் ஏசு
மார்கழி குளிரில் மயங்குகின்றார்

மதிகெட்ட மனித உள்ளங்கள்
மது உண்டு மயங்குகின்றன

பாவக்கரை நீக்கி
பரிசுத்த வாழ்வுதர
பூவுலக புண்ணியமாய்
பரமன் ஏசு பிறந்துள்ளார்

நாமோ
பட்டாடை உடுத்தி
பட்டாசு கொளுத்தி
பக்கத்துக்கு வீட்டிற்கு
பலகாரம் கொடுக்கின்றோம்

தேசம் தாண்டி
நேசக்கரம் நீட்ட
பேசும் மொழியறியா
பேதை மடியில்
தேவ மைந்தன் பிறந்துள்ளார்

போதை பழக்கமே
பாதையாகி போய்
வாதை கூடாரத்தில்
ஏதேன் தோட்டை
பேய்க்கனியாய்
மாந்தர்தம் மகிழ்கின்றோம்

எழுதியவர் : இளவல் (28-Aug-18, 2:44 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 49

மேலே