முத்தமிழ் கலைஞன்
அஞ்சுக முத்துவின் தவப்புதல்வனாய்
அரிதுதிதத்த திருக்குவளைக் கலைஞன்!
பஞ்சத்தில்த் தாய்மொழிக் கற்றறிந்து
நெஞ்சாரத் தொண்டாற்றியக் கவிஞன்!
அஞ்சாமல் தன்கருத்தை தனிநின்று
முரசொலியா லோதிய ஒப்பனையாளன்!
எஞ்சாமல் நின்று முத்தமிழ்த்
தொண்டாற்றிய இருநூறின் கடையோன்!
மையிட்டு வாழயியலா தகையாளிற்கு
மெய்யிட்டு அணியமைத்து தந்தாய் !
திறனிழந்து ஊனமுற்றோரின் பழிப்பெயரழித்து
மாற்றுத் திறனளித்து அடையமைத்தாய் !
அரசியல் மூவேந்தருடன் நின்றுப்போரிட்ட
அணையா துதிக்கும் உதயசூரியன் !
பலவற்றால் வேறுபட்டாலும் தமிழ்ப்
பற்றா லிணைவோம் ஒன்றாயிங்கு !
- தமிழால் தமிழனாய் இணைவோனாய்
மா- சங்கர்