கடவுள் பூமி வரமாட்டானா

கடவுள் பூமி வர மாட்டானா
ஒரு சுத்து சுத்தி மீண்டும்
பூமியை புதுப்பிக்க வரமாட்டான்

மலரில் முள் வைத்தது
பூவின் தற்காப்பிற்கா
விடை சொல்லத்தான்
பூமி வர மாட்டானா

மனிதம் எது ?
விலங்கு எது ?
வித்தியாசம் சொல்லத்தான்
பூமி வரமாட்டானா



.

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (29-Aug-18, 5:16 pm)
சேர்த்தது : panneer karky
பார்வை : 510

மேலே