கலையானவளே

உன் இதழில் சுவையாக
தேனீக்களும் தீக்குளிக்குதே !

நீ பழரசம் பருகியதே
என்னுள் பரவசமூட்ட...
நீ பல ரசம் செய்து
ஏன் சில்மிஷம் செய்கிறாய் ?!

பட்டுடுத்தி நீ வந்தபோது
கொட்டடித்து என் மனம் குதிக்க ...
கண்ணாடியும் கொஞ்சம் வெட்கப்பட்டு
உன் பின்னாடி ஒளிந்து கொண்டது !!

எழுதியவர் : குணா (29-Aug-18, 5:03 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 396

மேலே